செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (14:42 IST)

9 நொடிகளில் இடிந்து தகர்ந்த நொய்டா இரட்டை கோபுரம்! – வைரலாகும் வீடியோ!

Noida
சட்ட விதிகளை மீறி கட்டப்பட்டதாக நொய்டாவில் உள்ள கட்டிடம் இன்று குண்டு வைக்கப்பட்டு தகர்க்கப்பட்ட நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் கட்டப்பட்ட 36 மாடிக் கொண்ட அடுக்கு மாடி இரட்டை கோபுரம் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கட்டிடத்தை வெடி வைத்து தகர்க்கவும், கட்டிடத்தில் இடம் வாங்கியவர்களுக்கு 14% வட்டியுடன் பணத்தை கட்டிட நிறுவனம் தர வேண்டும் என்று தீர்ப்பானது.

இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணிக்கு கட்டிடம் தகர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கட்டிடத்திற்கு சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பு காரணமாக வெளியேற்றப்பட்டனர். அந்த பகுதிகளில் சுற்றி திரிந்த 36 தெரு நாய்களையும் பிடித்து பாதுகாப்பாக வைத்தனர்.

இந்நிலையில் சரியாக தற்போது 2.30 மணி அளவில் இரட்டை கோபுரம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதற்காக 3,400 கிலோ வெடிப்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள புகை அடங்க 5 மணி நேரம் ஆகும் என்றும், கட்டிட இடிபாடுகளை முழுவதுமாக அப்புறப்படுத்த 3 மாதங்கள் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது.