செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 12 ஜூன் 2020 (23:22 IST)

ஜிஎஸ்டி கணக்குகள் தாமதத்திற்கு அபராதம் வழங்கப்படாது - நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி கவுன்சிலின் 40 வது கூட்டம் வீடியோ கான்பிரஸ் வாயிலாக நடைபெற்றது. இதில் மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் இருந்து மீன் வளம் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

அப்போது, 2017 -2018 ஆம் ஆண்டிற்கு தமிழகத்திற்கு வரப்பெற வேண்டிய  ஜிஎஸ்டி தொகையான ரூ.4073 கோடியை விரைவாக வழங்க வேண்டும் எனவும் , 2018 -18 ஆம் ஆண்டிற்கான நிலுவைத் தொகை ரூ.552.1 கோடி 2019 -2020 நிலுவைத் தொகை ரூ.1101 .61 கோடி ஜிஎஸ்டி ஒழப்பீட்டி தொகையினை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது :

ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு அபராதம் வழங்கப்படாது என தெரிவித்துள்ளார்.

வரியை முழுமையாகச் செலுத்தி இருந்தால் கணக்குத் தாக்கலின் போது தாமதமாகும் அபராதம் இருக்காது எனவும்,கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோருக்கு உதவ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.