1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2019 (14:24 IST)

எஸ்.பி.ஐ. கட் ஆஃப் விவகாரம் – மண்டல அலுவலகம் முன் போராட்டம் !

எஸ்பிஐ கட் ஆஃப் மார்க் நிர்ணயிக்கப்பட்ட விவகாரத்தால் உண்டான சர்ச்சைகளை அடுத்து மண்டல அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

கடந்த ஜூன் 22, 23 மற்றும் 30 ஆம் தேதி நடைபெற்ற எஸ்பிஐ வங்கியின் கிளர்க் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. இதில் எஸ்.சி, ஓபிசி மற்றும் பொதுப்பிரிவினர் ஆகிய 3 தரப்பினருக்கும் 61.25 மதிப்பெண் கட் ஆப் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.டி பிரிவினருக்கு 53.75 மதிப்பெண் கட் ஆப் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு 28.5 மதிப்பெண் மட்டுமே கட் ஆப் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினரின் கட் ஆப் மார்க் எஸ்.சி, எஸ்.டி பிரிவினரை விட மிக குறைவாக உள்ளது. மத்திய அரசு பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு அளித்துள்ளாதால் இவ்வளவு குறைவாக கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. 

இந்நிலையில் இதனை எதிர்த்து எஸ்.பி.ஐ. வங்கியின் கோவை மண்டல அலுவலகத்தை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகத்தினர், மே 17 இயக்கம், எஸ்டிபிஐ, ஆதி தமிழர் ஆகியோரும் கலந்துகொண்டனர். அப்போது இந்த அறிவிப்பை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வலியுறுத்தினர். இதையடுத்து போராட்டக்காரர்களைக் கைது செய்துள்ளனர்.