1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 11 அக்டோபர் 2019 (08:23 IST)

ரூ.100 கோடிக்கும் மேல் வாங்கிய கடன்கள் தள்ளுபடி: ஒரு அதிர்ச்சி தகவல்

ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் வங்கிகளிடம் கடன் வாங்கிய சாமானியர்கள் வங்கி அதிகாரிகளால் நெருக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில் ரூபாய் 100 கோடிக்கு மேல் கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தகவல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இதில் பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே பெருமளவு கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவல் மூலம் ரூ.100 கோடி முதல் ரூ.500 கோடி வரை கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்த முடியாமல் திவால் ஆனவர்களின் கடன்களை எந்தெந்த வங்கிகள் எவ்வளவு தள்ளுபடி செய்துள்ளன என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. 
 
இந்த தகவலின்படி பாரத ஸ்டேட் வங்கி  ரூ.100 கோடிக்கு மேல் கடன் வாங்கிய 220 கடனாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ76,600 கோடி ஆகும். அதேபோல், ரூ500 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்றுள்ள கடனாளிகளின் ரூ37,700 கோடி கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
 
அதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கியும் 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கிய 94 வாடிக்கையாளர்களின் வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளதாகவும் இதன் மொத்த தொகை ரூ27,024 கோடி என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. அதேபோல், ரூ500 கோடிக்கு மேல் கடன் பெற்ற 12 தொழிலதிபர்களின் வாராக்கடன்கள் 9,037 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
 
மொத்தத்தில்  100 கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகளிடம் கண்ட வாங்கிய ரூ2.75 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 100 கோடி முதல் 600 கோடி வரை கடன் வாங்கிய தொழிலதிபரின் கடன்களை தள்ளுபடி செய்து விட்டு, ரூபாய் ஆயிரம், ரூபாய் இரண்டாயிரம் என கடன் வாங்கிய சாமானியர்களை வதைப்பது தான் வங்கிகளில் நியாயமா என்று கேள்விகள் எழுந்துள்ளது