செவ்வாய், 18 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (10:50 IST)

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குஜராத் மாநிலத்தில் இருந்து வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள தனியார் மகப்பேறு மருத்துவமனையில் ஏராளமான பெண்கள்  சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த மருத்துவமனையில் பெண் நோயாளிகளுக்கு ஊசி போடுவது மற்றும் சிகிச்சை அளிப்பது தொடர்பான வீடியோக்கள் யூடியூபில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், நோயாளிகள் தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் அனுமதி இன்றி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகளின் அடிப்படையில், மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், மருத்துவமனை ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் போது, மருத்துவமனையின் சிசிடிவி கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டதாகவும், அதிலிருந்தே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோக்கள் கசிந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் உள்பட ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran