செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (11:03 IST)

மாட்டுனா திரும்ப கிடைக்காது... கிளாஸ் ரூமுக்குள் நோ செல்போன்!

மாணவர்கள் பள்ளிகளுக்கும் செல்போன் கொண்டு வரக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

 
தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் முழுமையாக நடைபெறாமல் இருந்தது. கடந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் இடையே கொரோனா காரணமாக சில காலம் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவர்கள் நலன் கருதி பாடத்திட்டத்திலிருந்து சில பாடங்கள் குறைக்கப்பட்டன.
 
இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு திட்டமிட்டது போல 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று முதலாக பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டில் 1 முதல் 12 வகுப்புகள் வரை அனைவருக்கும் 100 சதவீதம் அனைத்து பாடங்களும் நடத்தப்படும். இந்த கல்வி ஆண்டு முழுமையான கல்வி ஆண்டாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதோடு மாணவர்கள் வகுப்பறைக்கு செல்போன் கொண்டு வரக்கூடாது எனவும் மீறி வகுப்பறைக்கு மாணவர்கள் கொண்டு வரும் செல்போன்களை பறிமுதல் செய்தால் திருப்பி  தர படமாட்டாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.