1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஜூலை 2022 (17:34 IST)

சுதந்திர தினத்தன்று விடுமுறை இல்லை: உபி முதல்வர் அதிரடி அறிவிப்பு

yogi
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை என்பது அனைவரும் அறிந்ததே
 
ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி விடுமுறை இல்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார் 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் வழக்கம்போல் ஆகஸ்ட் 15ஆம் தேதி செயல்படும் என அரசு அறிவித்துள்ளது 
 
அதுமட்டுமின்றி சுதந்திர தினத்தன்று அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்படாது என்றும் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது