ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2023 (12:01 IST)

தாஜ்மஹாலை கட்டணம் இன்றி இலவசமாக பார்க்கலாம்: அதிரடி அறிவிப்பு!

tajmahal
இன்று முதல் மூன்று நாட்களுக்கு தாஜ்மஹாலை கட்டணம் இன்றி இலவசமாக பார்க்கலாம் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஷாஜகானின் 368 வது நினைவு தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 17 முதல் 19 வரை தாஜ்மஹாலை இலவசமாக சுற்றி பார்க்க தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. 
 
அதுமட்டுமின்றி ஷாஜகான் மற்றும் மும்தாஜ் ஆகிரோகளின் கல்லறைகளையும் சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று முதல் மூன்று நாட்களுக்கு தாஜ்மஹாலை பார்க்க வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran