வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2023 (13:39 IST)

காதலர் தினத்தை முன்னிட்டு 9 கோடி ஆணுறைகள் இலவசம்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

Condom
காதலர் தினத்தை முன்னிட்டு 9 கோடியே 50 லட்சம் ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி இந்தியா உள்பட உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில் காதலர்கள் சந்தித்துக் கொள்வார்கள் என்பதும் ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறி கொள்வார்கள் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் பாலியல் நோய் பரவல் பரவல்கள், இளம் வயதில் கருவுறுதல் ஆகியவற்றை தவிர்ப்பதற்காக காதலர் தினத்தில் 9 கோடியே 50 லட்சம் ஆணுறைகளை இலவசமாக வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. 
 
பாலியல் நோய் பரவல்கள், இளம் வயதில் கருவுறுதல் போன்றவற்றை தடுப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்படுவதாகவும் எனவே காதலர் தினத்தை கொண்டாடுபவர்கள் அரசு வழங்கும் இலவச ஆணுறைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும் தாய்லாந்து அரசு அறிவு குறித்து உள்ளது.
 
Edited by Mahendran