1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 டிசம்பர் 2024 (11:34 IST)

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா? ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு..!

repo
ரெப்போ வட்டி விகிதம் அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கியால் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், சற்றுமுன் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்தார்.

ரெப்போ வட்டி விகிதம் தற்போது 6.5% இருக்கும் நிலையில், அதே வட்டி விகிதம் தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். இதனால் வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் எந்த விதமான மாற்றமும் இருக்காது.

இது கடன் வாங்கிய பொதுமக்களுக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொருளாதார வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இதுவரை 11வது முறையாக வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva