1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (12:46 IST)

நிதிஷ்குமார் ஆதரவு கேட்டால் தருவதற்கு தயார்: காங்கிரஸ் அறிவிப்பு

Nithesh
நிதிஷ்குமார் ஆதரவு கேட்டால் அவரது ஆட்சிக்கு ஆதரவு தர தயார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பீகாரில் தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது என்பதும் இந்தக் கூட்டணிக்கு பாஜக ஆதரவு அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் விரைவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் பீகார் மாநில கவர்னரை சந்திக்க இருப்பதாகவும் பாஜக கூட்டணியில் இருந்து விலகி எதிர் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் நிதிஷ்குமார் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கேட்டால் அவரை வரவேற்போம் என்றும் அவருக்கு முழுமையான ஆதரவு தருவோம் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது 
 
கடந்த சில நாட்களாக பாரதிய ஜனதா மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா கட்சி இடையே மோதல் ஏற்பட்டு வருவதை அடுத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது