ராமர் கோயில் கட்ட நிலம் ஒதுக்குவதில் முறைகேடு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
ராமர் கோவில் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல ஆண்டுகாலம் நடந்த ராம ஜென்மபூமி வழக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது என்பதும் இதனை அடுத்து ராமர் கோவில் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராமர் கோவில் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்துள்ளது என்றும் இந்த முறைகேட்டில் பாஜக எம்எல்ஏ வேத் பிரகாஷ் மற்றும் அரசு அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு உள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது
இதனை அடுத்து இந்த முறைகேடு குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்