1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 26 மார்ச் 2020 (15:14 IST)

ரூ. 15,000-க்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு பிஎஃப் தொகை செலுத்தும் - நிர்மலா சீதாராமன்

ரூ. 15 ஆயிரத்துக்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு பிஎஃப் தொகை செலுத்தும் என நிர்மலா சீதாராமன்

சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறதுஇந்த நிலையில் நாடு
முழுவதும் அடுத்த 21 நாட்களும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் தினுமும் கூலி வேலை செய்யும் மக்கள் உணவுக்கு அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக பலரும் உதவி புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  மாத வருமானம் ரூ. 15 ஆயிரத்துக்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு பிஎஃப் தொகை செலுத்தும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மேலும்,  அவர்கள் தங்கள் பிஎஃப் தொகையில் இருந்து 75 % தொகையை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புகள் 100 எண்ணிக்கைக்கு குறைவானவர்களுக்கே இந்த அறிவிப்பு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.