சிறு, குறு, தொழில் துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடனுதவி - நிர்மலா சீதாராமன்
பிரதமர் மோடி கூறிய ரூ.20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகளை இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுவதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அவர் கூறியதாவது...
"நிதிக்குள், நிதி" திட்டத்தின் கீழ், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி மூலதன நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், குறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது நடுத்தர தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரூ.20 கோடிக்கு குறைவான முதலீடு இருந்தால், அந்நிறுவனம் நடுத்தர தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும் எனவும் சிறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.25 லட்சத்திலிருந்து, ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது . சிறு, குறு, தொழில் துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடனுதவி திட்டத்தால் 45 லட்சம் சிறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும். புதிய கடன் பெற சொத்துப் பத்திரங்கள் போன்ற பிணை எதையும் தரத் தேவையில்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் உலக அளவிலான டெண்டர்கள் மூலம் பாதிக்கப்படுகின்றன. எனவே இனி 200 கோடி வரை global tender உலக அளவிலான டெண்டர்கள் முறை கைவிடப்படும் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளதைப் பதிவிட்டுள்ளார்.