வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (11:17 IST)

காதலியுடன் சேர்ந்து மனைவியை அடித்துக் கொன்ற செய்தி வாசிப்பாளர் !

உத்தர பிரதேச மாநிலத்தில் பிரபல செய்தி வாசிப்பாளரான அஜிதேஷ் மிஷ்ரா தனது மனைவியை வீட்டில் வைத்து கொலை செய்துள்ள சமப்வம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வருபவர் அஜிதேஷ் மிஷ்ரா.  இவர் அந்த மாநிலத்தில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளார். இவருக்கும் திவ்யா என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இதற்கிடையே அஜிதேஷுக்குத் தன்னோடு பணிபுரியும் பாவ்னா ஆர்யா என்ற பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

அஜிதேஷின் ஆஃபிஸ் காதலை அறிந்த அவரது மனைவி திவ்யா அஜிதேஷுடன் சண்டையிட்டுள்ளார். இதனால் மனைவியைக் கொன்றுவிட்டு காதலியோடு வாழ திட்டமிட்டுள்ளார் அஜிதேஷ். அதற்காக தன்னுடன் பணிபுரியும் அகில்குமாரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அகில், திவ்யாவுக்குத் தெரிந்த நண்பர் என்பதால் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது அஜிதேஷ் திவ்யாவைப் பூந்தொட்டியால் அடித்துக் கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றிப் போலிஸுக்குத் தெரியவர அவர்கள் அஜிதேஷ், அகில்குமார் மற்றும் பாவ்னா ஆகியோரைக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.