புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்திடும் முதல் ரூபாய் நோட்டு
கடந்த 2016ஆம் ஆண்டில் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த பின்னர் ரூ.10, ரூ.50, ரூ.200, ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் வெளியாகியது. இந்த நோட்டுக்கள் அனைத்தும் ஒவ்வொரு கலரில் வெளியாகியுள்ள நிலையில் தற்போது புதிய ரூ.20 நோட்டுக்கள் விரைவில் வெளியாகவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த புதிய ரூ.20 நோட்டுதான் சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பதவியேற்ற சக்தி காந்ததாஸ் கையெழுத்திடும் முதல் நோட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரூ.20 நோட்டு பச்சை நிறத்தில் இருக்கும் என்றும், இந்த நோட்டில் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் இதில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.