1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (14:59 IST)

”மதுபானமே 100 ரூபாய் தான், ஆனா அத குடிச்சிட்டு வண்டி ஓட்டுனா அபராதம் எவ்வளவு ன்னு தெரியுமா??

வாகன விதிமீறல் புதிய கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது.

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்களினால் ஏற்படும் விபத்துகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு விதி மீறலுக்கான அபராத தொகையை பலமடங்கு உயர்த்தி உள்ளது.

அதன் படி, டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ரூ.500 அபராதம், தற்போது ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டினால், விதிக்கப்பட்டிருந்த 100 ரூபாய் அபராதம் தற்போது 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக எடையை சுமந்து செல்லும் வாகனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 200 ரூபாய் அபராதம், தற்போது 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வண்டிகளுக்கு வழிவிடாமல் சென்றால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டினால், 6 மாதத்திலிருந்து 1 ஆண்டு சிறைதண்டனையும், இரண்டாவது முறையும் அவ்வாறு செய்தால் 2 ஆண்டுகள்  சிறைதண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாகவும் விதி முறைகளை மீறாமல் நடந்துகொள்ளுமாறும் காவல் துறையினரால் எச்சரிக்கப்பட்டுள்ளது.