திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 ஜூன் 2019 (15:03 IST)

’மனைவியின் கள்ளக்காதலனை’ ஓட ஓட வெட்டிக் கொன்ற ரவுடி : பகீர் சம்பவம்

சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகரில் வசித்து வந்தவர் தினேஷ்குமார் (26). இவர் தனது நண்பர்களுடன் இரு சக்கர்  வாகனத்தில் ராயப்பேட்டை நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோவில் வந்த இருவர் அவரை வழி மறித்தனர்.
அவர்களிடம் இருந்து தினேஷ்குமார் தப்பி ஓட முயன்றார். அவரைத்துரத்திச் சென்ற இருவரும் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றனர்.தினேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
 
இதை  நேரில் பார்த்த மக்கள் அலறி அடித்து ஓடினர். இதுபற்றி தகவல் அறிந்த மயிலாப்பூர் உதவி போலீஸ்கமிஷனர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று தினேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அங்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
 
இதுகுறித்து மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் காசி விஸ்வநாதன் வழக்குப்பதிவு அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வுசெய்து குற்றவாளிகளைத்தேடி வருகின்றனர். 
 
பின்னர், தினேஷை வெட்டியவர், தரமணியை அடுத்துள்ள கண்ணனி நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (28 ) என்பது தெரியவந்தது.
 
இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜேஷின் மனைவி சரண்யாவுக்கும், தினேஷ்குமாருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளதாகத்தெரிகிறது. இந்நிலையில் ஏற்கனவே தன்மனைவி சரண்யாவை வெட்டிய வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நிலையில், அந்த வழக்கி இருந்து ஜாமீன் பெற்று வந்த ராஜேஷ் தன் மனைவியின் கள்ளக்காதலன் தினேஷ்குமாரை வெட்டி கொலைசெய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையில் ரஜேஷ் மற்றும் அவரது கூட்டாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.