1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 நவம்பர் 2021 (22:14 IST)

டுவிட்டர் நிறுவனத்தின் புதிய சி.இ.ஒ நியமனம்

உலகளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும்  சமூக வலைதளம் டுவிட்டர். உலகில் எங்கு என்ன நடந்தாலும் அது நெட்டிசன்களால் கவனத்தில் கொள்ளப்பட்டும் டிரெண்டிங் ஆகிவிடும். உடனே அது பேசு பொருளாகி விடும்.

இந்நிலையில், பலகோடி பேர்களை வாடிக்கையாளர்களாக கொண்டுள்ள டுவிட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜேக் டோர்சி இன்று தனது ப்நதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அதேசமயம், டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயலதிகாரியாக பிராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளது.