திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 27 நவம்பர் 2021 (15:12 IST)

பிறந்த நாளில் தாய் தந்தையின் காலில் விழுந்து ஆசி பெற்ற உதயநிதி!

திமுக இளைஞரணி தலைவரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திமுக தொண்டர்கள், தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை அடுத்து தாய் தந்தையின் காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படத்தை உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது
 
சமூகநீதி திட்டம்-மாநில சுயாட்சி-பேரிடர் நிவாரணம்... என முதலமைச்சர்களில் முதல்வராய் மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் தலைவர் ஸ்டாலின் அவர்களிடம் எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துபெற்றேன். திமுக தலைவர் அவர்களின் வழியில் கழகம் மென்மேலும் வலுப்பெற தொடர்ந்து உழைப்போம். நன்றி.