பெற்றோர் மட்டுமின்றி மாமனார்-மாமியாரை கவனிக்காதவர்களுக்கு சிறை: புதிய மசோதா
பெற்றோர்களை சரியாக கவனிக்காத மகன், மகள்களுக்கு சிறைதண்டனை என்ற சட்டம் ஏற்கனவே அமலில் இருக்கும் நிலையில் தற்போது மாமனார், மாமியார்களை சரியாக கவனிக்காத மருமகன் மருமகளுக்கும் சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய மசோதா ஒன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி பெற்றோர்களை சரியாக கவனிக்காவிட்டாலும், மாமனார் மாமியாரை சரியாக கவனிக்காதவர்களுக்கும் ஜெயில் தண்டனை என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது
இந்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு பெரும்பாலான எம்பிக்கள் ஆதரவு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமானவுடன் பெற்றோர்களை கவனிக்காமல் இருப்பதும் மாமனார் மாமியாரை கவனிக்காமல் இருப்பதும் பல இடங்களில் தொடர்ந்தது அதிகமாகி வருவதால் மூத்த குடிமக்களை பாதுகாக்கும் வகையில் இந்த மசோதா இருக்கும் என்றும் சிறை தண்டனைக்கு பயந்து மகன் மற்றும் மருமகள் பெற்றோர் மற்றும் மாமனார் மாமியார்களை சரியாக கவனிப்பார்கள் என்பதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
இருப்பினும் பெற்றோர்களையும் மாமனார் மாமியாரையும் சட்டத்தின் மூலமும் பயத்தின் மூலம் கவனிக்க வைப்பது சரியா? என்ற ஒரு கேள்வியையும் சமூக வலைதள பயனாளர்கள் எழுப்பியுள்ளனர்