செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 ஜூன் 2020 (08:26 IST)

இனிமேல் ஒரு சீன பொருளையும் வாங்க கூடாது! – கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!

லடாக் எல்லையில் சீன ராணுவத்துடனான மோதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில் சீன பொருட்களை தவிர்க்க வேண்டிய இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

லடாக் எல்லையில் சீனா – இந்திய ராணுவத்தினரிடையே எழுந்த திடீர் மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 34 வீரர்களும் உயிரிழந்தனர். இந்திய வீரர்களை தாக்கியதற்காக பலரும் சீனாவுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நம் வீரர்களை தாக்கிய சீனாவிலிருந்து வரும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என பலர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். வட மாநிலங்களின் சில பகுதிகளில் வீட்டில் உள்ள சீன எலக்ட்ரானிக் பொருட்களை மக்கள் வீதியில் வைத்து உடைக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன. மேலும் சீன பொருட்களை தவிர்க்க வேண்டி #BoycottChineseProduct என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.