செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 ஜூன் 2020 (09:27 IST)

மணமான பெண்ணுடன் சகவாசம்! – இளைஞரை சிறுநீர் குடிக்க வைத்த கும்பல்!

ராஜஸ்தானில் திருமணமான பெண்ணுடன் பழகி வந்த ஒருவரை அக்கிராமத்தினர் சிலர் சிறுநீரை குடிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் பகுதியில் சமீப காலமாக இளைஞர் ஒருவரை சிலர் அடித்து துன்புறுத்தி சிறுநீர் குடிக்க வைக்கும் வீடியோ வைரலாகி வந்துள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வரின் கவனத்திற்கு செல்ல விசாரணை செய்ய உத்தரவு வெளியாகியுள்ளது. அதை தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையின் பேரில் பாதிக்கப்பட்ட நபர் மற்றும் சம்பவங்கள் குறித்து தெரிய வந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சிரோகி மாவட்டத்தில் உள்ள பேவ் பலாடி கிராமத்தை சேர்ந்த அந்த பாதிக்கப்பட்ட இளைஞர் தனது மாமா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மணமான பெண் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது அந்த கிராமத்தை சேர்ந்த சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல மாமா வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த இளைஞரை கடத்தி சென்ற கிராமத்தினர் சிலர் அவரை அடித்து உதைத்து சிறுநீர் குடிக்க வைத்து துன்புறுத்தியுள்ளனர். பிறகு அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சிரோகி மாவட்ட போலீஸார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரையும் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.