புதிய நாடாளுமன்றத்தின் சுவரோவியத்திற்குக் நேபாளம் எதிர்ப்பு.. என்ன காரணம்?
புதிய பாராளுமன்றத்தில் உள்ள சுவர் ஓவியங்களில் அகண்ட பாரதம் என்ற ஓவியத்தில் இந்தியாவுடன் சேர்ந்து நேபாளம் இருப்பதற்கு நேபாள நாட்டினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்த நிலையில் அதில் பல சுவர் ஓவியங்கள் உள்ளன. அதில் நேபாளம் நாட்டில் உள்ள புத்தரின் பிறப்பிடமான லும்பினி என்ற பகுதி இந்தியாவில் இருப்பது போல் அந்த சுவரொட்டியில் உள்ளது. புத்தரின் பிறப்பிடம் லும்பினி என்பது நேபாள நாட்டின் கலாச்சார அடையாளமாக இருக்கிறது என்றும் அதை அகண்ட பாரத வரைபடத்தில் இணைத்துள்ளதால் இந்தியா எல்லை மீறி உள்ளதாகவும் நேபாள அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்தியான் பெரும்பாலான அண்டை நாடுகளுடன் உறவில் சிக்கல் நிலவி வரும் நிலையில் இந்த சுவர் ஓவியத்தால் நேபாளத்துடனும் உறவில் விரிசல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
அசாம் மாநிலத்தின் சில பகுதிகளை சீனா தனது வரைபடத்தை இணைத்த போது இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் தற்போது இந்தியாவே அகண்ட பாரதம் என்ற பெயரில் நேபாள நாட்டை இணைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பதாக நேபாள அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன
Edited by Mahendran