1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 மே 2023 (10:21 IST)

ஒவ்வொரு ஆண்டும் செங்கோல் தினம் கொண்டாடப்படும்: ஆளுனர் ஆர்.என்.ரவி

நேற்று பா புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவப்பட்ட நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மே 28ஆம் தேதி செங்கோல் தினம் கொண்டாடப்படும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார் 
 
டெல்லியில் நேற்று புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது என்பதும் இதனை அடுத்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையிலும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறம் தர்மம் நேர்மையை குறிக்கும் செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டிருப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய பெருமை என்று கூறினார். 
 
மேலும் செங்கோல் நிறுவப்பட்டா மே 28ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்படும் என்றும் அவர் கூறினார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சாதி மதத்தால் இந்திய மக்கள் பிரிக்கப்பட்டனர் என்றும் தற்போது கலாச்சாரம் நாகரிகம் ஆன்மீகம் கொண்ட நாடாக இந்தியா விளங்கி வருகிறது என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran