திங்கள், 25 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 28 மே 2023 (07:39 IST)

தமிழன்டா.. பாராளுமன்றத்தில் ஜொலிக்க போக்கும் செங்கோல் குறித்து ரஜினி ட்விட்..!

Rajinikanth
பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கும் நிலையில் இந்த கட்டிட திறப்பு விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து பல பிரமுகர்கள் சென்றுள்ளனர். 
 
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்கள் டெல்லி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு பல திரை உலக பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் இருந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராளுமன்ற திறப்பு விழா கட்டிடத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 
 
இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல்.
 
#தமிழன்டா 
 
தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
 
Edited by Siva