வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 25 ஏப்ரல் 2024 (12:56 IST)

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளீர்களா? உங்கள் தேர்வு மையத்தை எப்படி தெரிந்து கொள்வது?

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவர்களுடைய தேர்வு மையம் எது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
2024 ஆம் ஆண்டு நீட் தேர்வு மே ஐந்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தேர்வு மையங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது
 
 தேசிய தேர்வு முகமையும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் தங்களுடைய விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு தாங்கள் நீட் தேர்வு எழுத வேண்டிய தேர்வு மையம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதன் பின்னர் அதை பிரிண்ட் எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் 
 
நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டும் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதையும் மாணவர்கள் பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டுமா என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
 மே ஐந்தாம் தேதி தேர்வு மையத்துக்கு செல்லும் மாணவர்கள் இந்த இரண்டு பிரிண்டையும் தேர்வு அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த முழு விவரத்தை கீழ்கண்ட இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்
 
https://www.nta.ac.in/

Edited by Siva