ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 6 மார்ச் 2023 (07:49 IST)

நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

NEET
இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
2023 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது என்பதும் இதன் அடிப்படையில் தான் எம்பிபிஎஸ் என்ற மருத்துவ படிப்பிற்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்பதும் தெரிந்ததே.
 
நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூறி வந்தாலும் நீட் தேர்வு என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று முதல் நீட் தேர்வுக்கான விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் விண்ணப்பம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva