தொடர்புடைய செய்திகள்
- பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று செய்முறைத்தேர்வு: ஏற்பாடுகள் தயார்..!
- அதிவேகமாக மோதிய கார்; பள்ளி மாணவர்கள் பரிதாப பலி! – வாணியம்பாடியில் சோகம்!
- ஈஷாவை பார்வையிட்ட கட்டிடக்கலை மாணவர்கள் - நாகை கீழ்வேளூரில் இருந்து கட்டிடக்கலை கற்றல் ஆய்விற்காக வருகை
- கோவை: 'ஈஷா' மையத்தை பார்வையிட்ட கட்டிடக்கலை மாணவர்கள்
- பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும்போது உடல்குறைபாடுகளை குறிப்பிடக்கூடாது: அரசாணை வெளியீடு..!
11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் இன்று வெளியீடு..
பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதும் 11ஆம் வகுப்புக்கு பொது தேர்வு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளது என்றும் தெரிந்தது. இந்த தேர்வுகளை சுமார் 17 லட்சம் மாணவர்கள் எழுத உள்ள நிலையில் இந்த தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் இணையத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
https://www.dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என தமிழக அரசின் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தற்போது பதினோராம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
