திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (00:41 IST)

நீட் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும்!- தேசிய தேர்வு முகமை

இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் 2021 தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரவு 11;50 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி முகமை அறிவித்தது.

இந்நிலையில்,கொரொனா தொற்றால் நீட் தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், இதுகுறித்த முக்கிய தகவல் வெளியாகிறது.

அதில், திட்டமிட்டபடி இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12 -ல்  நடைபெறும் எனவும்  நீட் தேர்வை தள்ளி வைப்பது தொடர்பாக எந்த ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படவில்லை  தெரிவிக்கப்பட்டுள்ளது.