ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : புதன், 1 நவம்பர் 2017 (15:50 IST)

கொதித்தெழுந்த முன்னாள் காதலிகள் - பின் வாங்கிய பிரபல நடிகர்

தனது முன்னாள் காதலிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், தனது சுயசரிதை புத்தகத்தை திரும்பப் பெறுவதாக பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக்கி தெரிவித்துள்ளார்.


 

 
பாலிவுட்டில் கிளுகிளுப்பான படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் நவாஸூத்தின் சித்திக்கி. மிகவும் திறமையான நடிகர். இவர் சமீபத்தில் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதில், தனது முன்னாள் காதலியும், மிஸ் லல்வி என்ற படத்தில் தன்னுடன் நடித்த நிஹாரிகா சிங்குடன் அந்தரங்க உறவு வைத்திருந்தது பற்றி விரிவாக எழுதியிருந்தார். இதற்கு நிஹாரிகா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
 
திருமணமானதை மறைத்து தன்னுடன் நவாஸூத்தின் பழகியதாகவும், அவர் ஒரு மர்ம நபர் என்பதாலேயே அவரை விட்டு பிரிந்ததாக தெரிவித்திருந்தார்.
 
அதேபோல் அந்த புத்தகத்தில், தான் ஏழையாக இருந்ததால், தன்னுடைய முன்னாள் காதலி சுனிதா தன்னை விட்டு பிரிந்து சென்றதாகவும் நவாஸுத்தின் குறிப்பிட்டிருந்தார். ஆனால், நவாஸுன் மோசமான புத்தி காரணமாகவே அவரை பிரிந்ததாக சுனிதா மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
அதோடு, நிஹாரிகாவுடன் உறவு கொண்டதை விளக்கமாக எழுதி ஒரு பெண்ணை அவர் இழிவு படுத்திவிட்டதாக டெல்லியை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.
 
இப்படி பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால், யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பது நோக்கமில்லை. அப்படி நடந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது புத்தகத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன் என நவாஸூத்தின் தெரிவித்துள்ளார்.