ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2017 (12:24 IST)

கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகர்

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் கபில்தேவ். தற்போது இயக்குனர் கபீர்கான், கபில்தேவ்  வாழ்க்கையை படமாக எடுக்கவுள்ளாராம்.

 
விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் வரிசையில் தோனி, மேரிகோம், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரையடுத்து தற்போது கபில்தேவ் இணைந்துள்ளார். அவரது கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். கடைசியாக பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் ரன்வீர்சிங் இப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
 
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தலை சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்தார் கபில்தேவ். இந்தியாவுக்காக முதல் உலககோப்பையை 1983-ம் ஆண்டு வென்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கபீர்கான் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தை பேன்தோம் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது.