வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (14:19 IST)

பெப்சி வேலை நிறுத்தம் வாபஸ் - நாளை முதல் படப்பிடிப்புகள் தொடக்கம்

பெப்சி தொழிலாளர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.


 

 
திரைப்பட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பற்றி பெப்சி அமைப்பிற்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தததையடுத்து, பெப்சி ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 
 
இதையடுத்து கடந்து 3 நாட்களாக காலா, மெர்சல் உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் கோரிக்கையை ஏற்று வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக, பெப்சி சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தற்போது தெரிவித்துள்ளார்.
 
மேலும், நாளை முதல் பெப்சி சங்க ஊழியர்கள் வழக்கம்போல் பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும், நாளை தயாரிப்பாளர்களோடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.