1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 27 ஜூன் 2017 (19:53 IST)

எம்.ஜி.ஆராக நடிக்கும் சத்யராஜ்?

எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
காமராஜர் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கிய இயக்குநர் பாலகிருஷ்ணன் தற்பொது எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க இருக்குகிறார். இதில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ்யிடம் கேட்கப்பட உள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
 
தமிழக அரசியல் மற்றும் சினிமாவில் பெரும் புள்ளியாக இருந்தவர் எம்.ஜி.ஆர். இவரது வாழ்க்கை வரலாறு அவரது கதாபாத்திரத்தில் நடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சத்யராஜ் இதில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது என இயக்குநர் தெரிவித்துள்ளார்.