10 நாட்களில் நாடு முழுவதும் தீ; இந்தியாவை எச்சரித்த நாசா
புவி வெப்பமயமாதல் காரணமாக இந்தியாவில் மட்டும் கடந்த 10 நாளில் அதிகளவிலான தீப்பிடித்துள்ளதாக நாசா செயற்கைக்கோள் வரைபடத்தை வெளியிட்டு இந்தியாவை எச்சரித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, தற்போது இந்தியாவில் தீப்பற்றி எரிந்த இடங்களை, செயற்கைக்கோள் மூலம் படமெடுத்து வெளியிட்டுள்ளது. அதில் நாட்டின் பெரும்பான்மையான பகுதியில் தீ பிடித்துள்ளது.
புவி வெப்பமயமாதல், கோடைக்காலம், போன்ற காரணங்களால் தென் மாநிலங்கள் உள்பட நாட்டின் பல இடங்களில் உள்ள மலைப்பகுதிகள் காடுகள், வயல்வெளிகளில் தீ பிடித்துள்ளது. குறிப்பாக வயல்வெளிகளில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக கரும்புகை சூழ்ந்ததால் இயற்கை பேரிடருக்கு வழிவகுத்துவிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயினால் அதிக அளவு மாசு ஏற்பட்டுள்ளதாகவும், இது தடுக்கப்பட வேண்டும் என்றும் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.