ஆண்டவனுக்கு கட்டுபட்டே தீர்ப்பளித்தோம்: இந்திரா பானர்ஜி... யார் அந்த ஆண்டவன்?
நேற்று ஓபிஎஸ் உள்ளிட்ட எம்எல்ஏகளின் தகுதி நீக்க வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஷ் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு, இன்று வழக்கறிஞர் சூர்யபிரகாசம் ஆஜராகி ஒரு முறையீடு செய்தார்.
அதில், நேற்று வழங்கிய தீர்ப்பை, தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் வாங்கப்பட்ட தீர்ப்பு என்று விமர்சனம் செய்துள்ளார். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே, அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று முறையிட்டார்.
ஆனால், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்ய, அனைவருக்கும் உரிமை உள்ளது. இந்த வழக்கில் மனசாட்சிப்படி ஆண்டவனுக்கு கட்டுப்பட்டு நாங்கள் தீர்ப்பு அளித்துள்ளோம் என தெரிவித்தார்.
அதோடு, இதனை நீதிமன்ற அவமதிப்பு என்று நீங்கள் கருதினால் மனுவாக தாக்கல் செய்யுங்கள். கோடை விடுமுறைக்குப் பின்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கின் தீர்ப்பு அரசியல் வட்டாரத்திலும் சமூக தளங்களிலும் விமர்சனத்தை எதிர்கொண்டுவருகிறது. அதில் தற்போது தலைமை நீதிபதி இவ்வாறு கூறியிருப்பதற்கு ஆண்வனுக்கு கட்டுப்பட்டு என்பது தேசத்தை ஆள்பவருக்கு கட்டுபட்டா? என விமர்சித்து வருகின்றனர்.