1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 16 நவம்பர் 2016 (21:05 IST)

மோடி, உங்களை கொல்ல விரும்புவர் யார்? விளக்கம் கேட்ட காங்கிரஸ் தலைவர்

பிரதமர் மோடி, உங்களை கொல்ல விரும்புபவர் யார் என்று காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா பாராளுமன்றத்தில் விளக்கம் கேட்டார்.


 

 
கோவா மாநிலம் பனாஜி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கருப்பு பணத்தை ஒழிக்க நான் மேற்கொண்ட நடவடிக்கையால் என்னை சில சக்திகள் அழிக்க எழும்பியுள்ளனர். என்னை உயிரோடு வைத்து எரித்தாலும், பின்வாங்க மாட்டேன் என்று பேசினார்.
 
இதுகுறித்து மாநிலங்களவையில் ரூபாய் நோட்டுகள் தடை விதிக்கப்பட்டது தொடர்பான விவாதத்தின் போது, கங்கிரஸ் தலைவர் ஆனந்த சர்மா கூறியதாவது:-
 
உங்களை கொல்ல விரும்புவது யார்? பாராளுமன்றத்தில் தெரிவியுங்கள். நீங்கள் உலகம் முழுவதும் சுத்துகிறீர்கள், அதில் என்ன தியாகம் செய்தீர்கள்?
 
பிரதமரை கொல்ல விரும்புவது யார், நாங்கள அவர் நீண்ட நாட்கள் வாழவே விரும்புகிறோம். ரூபாய் நோட்டுகள் மீதான் தடை மூலம் மத்திய அரசு நிதி அராஜகத்தை கொண்டு வந்துள்ளது.