1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. nadda continue as bjp president

2024 நாடாளுமன்ற தேர்தல் வரை நட்டா தான் தலைவர்: அமித்ஷா அறிவிப்பு

jp nadda
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அதற்கு முன்னர் பாஜக தேசிய தலைவர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சற்று முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2024 பாராளுமன்ற தேர்தலை நட்டா தலைமையில் சந்திப்போம் என்று அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து தேசிய தலைவர் இப்போதைக்கு மாற்றம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் எம் பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடையாத்திரை சென்று வருகிறார்
 
அதேபோல் பாஜகவில் உள்ள தலைவர்களும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுடன் கர்நாடகா உள்பட ஒன்பது மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில் மீது தாக்குதல்