1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 5 ஜனவரி 2024 (12:57 IST)

இஸ்லாமியர்களும் 'ஜெய் ஸ்ரீ ராம் ' சொல்ல வேண்டும்- ஆர்,எஸ்.எஸ் உறுப்பினர் சர்ச்சை பேச்சு

indiresh kumar rss
அயோத்தியில் ராமர் கோயிலுக்கு எனத் தனியாக அறக்கட்டளை தொடங்கப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டு கோவில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் ஜனவரியில் கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
 
இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல அரசியல் பிரமுகர்களும், விவிஐபிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
இந்த    நிலையில்,  அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியின்  அறிவுரையின்படி, கும்பாபிஷேகப் பெருவிழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணி நடந்து வருகிறது.
 
இந்த நிலையில்,  இஸ்லாமியர்களும் ஜெய்ஸ்ரீ ராம் என்று சொல்ல வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்.செயல் உறுப்பினர் இந்திரேஷ் குமாரின் சர்ச்சை கருத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
இராமர் கோயில் திறப்பு விழா வரும் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அன்று மசூதி, தர்கா, மதரசா உள்ளிட்ட இடங்களில் உள்ள இஸ்லாமியர்களும், ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இதற்கு எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கண்டனம்  தெரிவித்து  வருகின்றனர்.