செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 டிசம்பர் 2020 (10:56 IST)

புதிய உச்சங்களைத் தொட்ட மும்பை பங்குச்சந்தை! 212 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!

மும்பை பங்குச் சந்தை இன்று புதிய உச்சத்தை தொட்டு உள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிர்ம்ப் படுதோல்வி அடைந்ததும், ஜோ பைடன் வெற்றி பெற்றதுமன செய்தி வந்ததிலிருந்தே உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டு உள்ளன. குறிப்பாக இந்தியாவில் மும்பை பங்குச் சந்தையின் கடந்த சில நாட்களாக நல்ல ஏற்றதில் இருந்து வருகிறது
 
இந்த நிலையில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தொடர்ந்து புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. இன்றைய தொடக்க நேரம் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 212 புள்ளிகள் உயர்ந்து 45,639 என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் நிப்டி 13406 புள்ளிகளாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் முதலீட்டார்கள் மிகப் பெரிய அளவில் லாபம் அடைந்து வருகின்றனர் என்பது மட்டுமின்றி பங்குச்சந்தை இன்னும் சில நாட்களுக்கு நல்ல ஏற்றமாக இருக்கும் என்றும் பங்கு சந்தை நிபுணர்கள் கூறி வருகின்றனர்