ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 5 டிசம்பர் 2020 (16:11 IST)

பிரபல நடிகரின் அம்மாவுக்கு கொரோனா – விமான ஆம்புலன்ஸ் மூலம் மும்பை வருகை!

பிரபல நடிகையும் ரன்பீர் கபூரின் அம்மாவுமான நீது கபூருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பழம்பெரும் நடிகரான ரிஷி கபூரின் மனைவியான நீது கபூர் (ரன்பீர் கபூரின் தாயார்) பல ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இப்போது ஜக் ஜக் ஜியோ எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் வருன் தவான் கதாநாயகனாக நடிக்க, ராஜ் மேத்தா இயக்க கரன் ஜோஹர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சண்டிகரில் நடந்து வந்தது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னதாகவே அனைவருக்கும் கொரோனா தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அனைவருக்கும் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. ஆனால் இப்போது நடத்தப்பட்ட மறு பரிசோதனையில் நீது கபூர், வருண் தவான் மற்றும் இயக்குனர் ராஜ் மேத்தா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.’

இதையடுத்து ரன்பீர் கபூர் தன் தாயாரை விமான ஆம்புலன்ஸ் மூலமாக மும்பைக்கு கொண்டு வந்துள்ளார். அங்கு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.