திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (11:22 IST)

நடைபாதையில் தூங்கியவர்களை அடித்துக் கொன்ற செங்கல் சைக்கோ?? – மும்பையில் பரபரப்பு!

மும்பையில் நடைபாதையில் படுத்து தூங்கியவர்களை மர்ம நபர் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை பைகுல்லா மார்க்கெட் மற்றும் ஜே.ஜே.அரசு மருத்துவமனை அருகே இருவர் கல்லால் அடிபட்ட நிலையில் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸார் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் இரண்டு பேரையும் கல்லால் அடித்துக் கொன்றது ஒரே நபர்தான் என கண்டறிந்துள்ளனர்.

அந்த குறிப்பிட்ட நபரை அங்க அடையாளங்களை கொண்டு தீவிரமாக தேடி வந்த போலீஸார் ஜே.ஜே மேம்பாலத்தின் கீழ் அந்த நபரை கைது செய்துள்ளனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீஸார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.