வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 12 ஜூலை 2020 (08:59 IST)

இலவச வைஃபை; கை கழுவ சானிட்டைசர்! – மும்பையை கலக்கும் ஆல் இன் ஆல் ஆட்டோ!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு அம்சங்களுடன் மும்பையில் செயல்பட்டு வரும் ஆட்டோ தொழிலதிபர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் 8 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், மக்கள் முகக்கவசம் அணிவது, சானிட்டைசர் உபயோகிப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அரசு தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் வீடுகளில் மட்டுமல்லாது பணிபுரியும் இடங்கள், கடைகள் ஆகியவற்றிலும் அனைவரும் கைகளை கழுவ சானிட்டைசர்கள் போன்ற வசதிகளை ஏற்படுத்தவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசு அறிவுறுத்திய பாதுகாப்பு அம்சங்களுடன் மேலும் பல வசதிகளையும் ஆட்டோவிலேயே ஏற்படுத்தியுள்ளார் மும்பையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர். குப்பைகளை வெளியே வீசாமல் இருக்க ஆட்டோவினுள்ளேயே குப்பைத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பயணிகள் தங்கள் கைகள், முகத்தை சுத்தம் செய்து கொள்வதற்காக வாஷ் பேசன் அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து வெளியேறும் நீர் கீழே அமைக்கப்பட்டுள்ள பூச்செடிகளுக்கு பயன்படுகிறது. இதுதவிர பயணிகள் செல்போன்களுக்கு சார்ஜ் போட்டுக்கொள்ளும் வசதி, இலவச வைஃபை, பேன் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆட்டோ குறித்து ட்வொட்டரில் பதிவிட்டுள்ள மகேந்திரா நிறுவனர் ஆனந்த் மகேந்திரா “கொரோனா சமயத்திலும் நல்ல விஷயம் என்னவென்றால் இந்தியா துரிதமாக செயல்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.