திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 30 செப்டம்பர் 2019 (15:09 IST)

கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்த 4 வயது சிறுவன்.. சிசிடிவியில் பதிவான பகீர் சம்பவம்

சாலையில் சென்றுகொண்டிருந்த 4 வயது சிறுவன் ஒருவன், மழையால் தேங்கிய கழிவு நீர் கால்வாயை தாண்ட முயன்றபோது தவறி விழுந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளிலும், மூடப்படாத ஆள்துளை கிணறுகள், கால்வாய்கள் ஆகியவற்றில் தவறி விழுந்து சிறுவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பல நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் இதே போல ஒரு சம்பவம் தற்போது ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த சிறுவன் காப்பாற்றப்பட்டான்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாலையில் தேங்கிக் கிடந்த கழிவு நீரை ஒரு 4 வயது சிறுவன் தாண்ட முயற்சித்துபோது வழுக்கி கழிவு நீரில் விழுந்தான். பின்பு எழுந்திருக்க முயன்றபோது மீண்டும் வலுக்கி விழுந்ததில் கழிவு நீர் கால்வாயில் மூழ்கினான். உடனடியாக அந்த சாலையில் இருந்த வாலிபர் ஒருவர், அந்த சிறுவனை கால்வாயிலிருந்து தூக்கி காப்பாற்றினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.