வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 8 ஜனவரி 2022 (19:48 IST)

டெல்லியில் இன்று ஒரே நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா கேஸ்கள்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும் நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு மிக அதிகமான உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே 5ஆம் தேதிக்கு பிறகு டெல்லியில் ஒரே நாளில் 20 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு உள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
டெல்லியில் இன்று ஒரே நாளில் 20,181 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 11,869 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர் என்பதும், இன்று ஒரே நாளில் 7 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
டெல்லியில் தற்போது 48,178 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.