1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Monkey drinks water in pipe and close a tap video going to viral

மனிதர்களுக்கு குரங்கு சொல்லும் செய்தி – வைரலான வீடியோ

National News
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள குரங்கு வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

குரங்கு ஒன்று குழாயில் தண்ணீர் குடித்துவிட்டு அதை சரியாக மூடிவிட்டு போகும் ஒரு வீடியோவை முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.ஒய்.குரைசி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் “மனிதர்களுக்கு என்ன ஒரு அழகான கருத்தை சொல்கிறது” என பதிவிட்டுள்ளார்.

அதில் நிறைய பேர் அந்த குரங்கின் செயல்திறன் குறித்து கமெண்டுகளில் விவாதித்து வருகின்றனர். குரங்குகள் மனிதனை விட பொறுப்புள்ளவையாக இருக்கின்றன என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ஏற்கனவே பலநாட்களாக இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கும் வீடியோதான் என்றாலும், தண்ணீர் பிரச்சினையால் இந்தியாவில் பல பகுதிகள் வறண்டு வரும் நிலையில் நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக பலர் கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரையில்
உன்னாவ் பாலியல் விவகாரம் ! எங்களுக்கும் ஆபத்து ஏற்படுமா ? மாணவி போலீஸிடம் கேள்வி