வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2023 (17:51 IST)

மத்தியப் பிரதேச புதிய முதலமைச்சர் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் சமீபத்தில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேசம் மாநில முதல்வராக  மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு உஜ்ஜைன் தொகுதி எம்எல்ஏவாக தேர்வான மோகன் யாதவ் அம்மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை ஏற்க உள்ளார்.

கடந்த முறை மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்த போது சிவராஜ் சவுகான் முதலமைச்சராக இருந்த நிலையில் அவரது அமைச்சரவையில் மோகன் யாதவ் கல்வி அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் முதலமைச்சர் ஆக உள்ளதை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Edited by Mahendran