திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2020 (06:55 IST)

ஃபேஸ்புக், டுவிட்டரில் இருந்து விலகல்? மோடியின் முடிவுக்கு ராகுல் அறிவுரை

அனைத்து சமூக வலைதளங்களில் இருந்து விலகுவது குறித்து ஆலோசனை செய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளதை அடுத்து அவரை ஃபாலோ செய்து வரும் மில்லியன் கணக்கானோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இது குறித்து தனது பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராம், யூ டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுவது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் ஆலோசனை செய்ததாகவும் இதுகுறித்த தகவலை விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
 
ஃபேஸ்புக், டுவிட்டரில் உலகிலேயே அதிக ஃபாலோயர்கள் வைத்திருப்பவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு டுவிட்டிற்கும் மில்லியன் கணக்கில் லைக்ஸ்கள் குவியும். அந்த அளவுக்கு அவரது மில்லியன் கணக்கான ஃபாலோயர்கள் அவரது டுவிட்டுக்களை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமரின் இப்படி ஒரு டுவிட்டை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில் பிரதமரின் இந்த முடிவு குறித்து கருத்து கூறிய ராகுல்காந்தி, ‘வெறுப்பை கைவிடுங்கள், சமூக வலைத்தளங்களை அல்ல’ என்று அறிவுரை கூறியுள்ளார்.