ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 ஏப்ரல் 2021 (11:43 IST)

சிபிஎஸ்இ தேர்வு தேதி மாற்றப்படுமா? மோடி 12 மணிக்கு ஆலோசனை !

சிபிஎஸ்இ தேர்வு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சருடன் பிரதமர் மோடி 12 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். 

 
ரம்ஜான் பண்டிகை வரும் மே மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே மே 13 மற்றும் 15 ஆம் தேதிகளில் சிபிஎஸ்இ தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 
 
இதனை அடுத்து மே 15 ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு மே 21 ஆம் தேதிக்கு மே 13 ஆம் தேதி நடைபெற இருந்த பன்னிரண்டாம் வகுப்பு இயற்பியல் தேர்வு ஜூன் 8 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து மே மாதம் நடக்க இருக்கு 10 மற்றும் 12 சிபிஎஸ்இ தேர்வை கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்க பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனால் சிபிஎஸ்இ தேர்வு தொடர்பாக கல்வித்துறை அசை்சருடன் பிரதமர் மோடி 12  மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.