வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 14 மே 2018 (18:31 IST)

இரண்டே மணி நேரத்தில் திருப்பதியில் இலவச தரிசனம்: பக்தர்கள் வரவேற்பு

திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க வேண்டுமானால் குறைந்தது 12 மணி நேரம் காத்திருக்க வேண்டும். அதிலும் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சாமி தரிசனம் செய்ய 25 மணி நேரம் ஆவதாக பக்தர்கள் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் பக்தர்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வந்தால் அவர்களுக்கு சாமி தரிசனம் செய்யும் நேரம் குறிப்பிடப்படும் என்றும், அந்த நேரத்தில் அவர்கள் வந்தால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்யலாம் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது
 
இந்த புதிய நடைமுறை கடந்த 2ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி ஆதார் அட்டை கொண்டு சென்று பக்தர்கள் வெகு எளிதாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தரிசனத்திற்காக அதிக நேரம் காத்திருக்காமல், ஆதார் அட்டையை கொண்டு சென்று குறிப்பிட்ட நேரத்திற்கு சாமி தரிசனம் செய்து கொள்ள தேவஸ்தான நிர்வாகம் விளம்பரம் செய்து வருகின்றது.